ஆம்பூர் அருகே வீட்டில் பூட்டை உடைத்து 8சவரன் நகை கொள்ளை

ஆம்பூர் அருகே மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 1 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை;

Update: 2025-01-25 02:25 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பட்டபகலில் பூட்டிய வீட்டில் 8 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளைஉமராபாத் காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனது நிலத்தில் வசித்து வரும் நிலையில், இன்று, வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி பணிக்குச்சென்ற நிலையில், இவரது பிள்ளைகள் பள்ளிக்குச்சென்றிருந்த நிலையில், இதனை அறிந்த மர்மநபர்கள் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்கநகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.. பின்னர் பணிக்குச்சென்று வீடு திரும்பிய வெற்றிவேல் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்கநகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து வெற்றிவேல் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இக்கொள்ளைச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் விசாரணை மேற்க்கொண்டு, வீட்டில் கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்..

Similar News