ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு பிடித்த 8 வீரர்கள் காயம்
ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு பிடித்த 8 வீரர்கள் காயம் அடைந்தனர்;

அரியலூர், மார்ச்19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி இன்று மாலை நடைபெற்றது. போட்டியில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், .மீன்சுருட்டி, உடையார்பாளையம், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 200 -க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.. இதில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் மஞ்சுவிரட்டில் காளைகளையும் காளைகளைப் பிடிக்க முயற்சித்த மாடுபிடி வீரர்களையும் பார்வையாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். போட்டியை காண ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி சுத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சுவிரட்டு விழாவில் காயமடைந்த 8 பேரும் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.