ஒரே நாளில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவு;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அம்மன் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (வயது 38). இவர், திருப்பூர் அவிநாசிபாளையத்தில் இருந்து திருச்சி உறையூருக்கு கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி வேனில் கறிக்கோழி ஏற்றி வந்தார். திருச்சி- கரூர் சாலையில் மல்லாச்சிபுரம் அருகே வந்த போது அவரது வாகனத்தை வழிமறித்த பரத் (38), முகில்குமார் (28), மணிகண்டன் (38), கேசவன் (28), ரபீக் (29) ஜெய்சங்கர் (26) ஆகி யோர் சவுந்தர்ராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்தனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சோமரசம்பேட்டையை அடுத்த அரியாவூர் ஆறு அருகே சட்ட விரோத மாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராம் (42) என்பவரை சோமரசம்பேட்டை போலீசார் கடந்த 15-ந் தேதி கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தார். மாவட்ட கலெக்டர் சரவணன் 7 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட் டார். இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியான அல்லாபிச்சை(40) தொடர் குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.