குமரி மாவட்டம் குழித்துறை, பொற்றவிளையை சேர்ந்தவர் சுஜின் இவரது மனைவி உஷா (36) ,திருத்துவபுரத்தில் ஒன்பது ஆண்டுகளாக வாடகைக்கு கடை எடுத்து காருண்யா ஆப்டிகல்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் குழித்துறை வெள்ளச்சிமாவிளையை சேர்ந்த அரிச்சந்திரன் (65) என்பவரின் தூண்டுதலின் பெயரில் அவரது மகன் ஸ்டாலின் (43 ) ,உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் 16-ம் தேதி நள்ளிரவில் கடையின் சட்டரை உடைத்து கடையில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் ரூ.50,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து களியக்காவிளை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.