குளித்தலையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சிவன் மலையில் அசத்தல்

படிக்கட்டுகளில் யோகாசனம் செய்து கொண்டு மலை ஏறி சாமி தரிசனம்;

Update: 2026-01-05 01:48 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் மகன் ராகவன் தண்ணீர்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 5 ஆண்டுகளாக யோகாசனம் கற்று வந்தார். இவர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலை கோயிலில், நேற்று ஒவ்வொரு படிக்கட்டில் ஒரு யோகாசனம் செய்தார். உலக நன்மைக்காகவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் 9 நாட்கள் குடும்பத்துடன் விரதம் இருந்து காப்பு கட்டி இந்த யோகாசனங்களை செய்தார். மலை உச்சி வரை 100 ஆசனம் செய்தார். இதற்காக 3 மணி நேரம் ஆனது. இதற்கு முன்னால் அய்யர்மலையில் 1017 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News