துவரங்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்று குட்டி உயிருடன் மீட்பு .

துவரங்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்று குட்டி உயிருடன் மீட்பு .;

Update: 2026-01-05 16:58 GMT
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஸ்டாலின் நகர் பகுதியில் அஞ்சலை 50 என்பவரது கன்று குட்டி மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதைக் கண்ட உரிமையாளர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த கன்றுகுட்டியை கிணற்றில் இறங்கி கயிற்றின் உதவியுடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News