திண்டுக்கல்லில் ரூ.1,595 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dindigul;

Update: 2026-01-07 09:14 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள மைதானத்தில் கலைஞர் கைவினைக் திட்டம் மண்டல அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 1,595 கோடி மதிப்பீட்டில் 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, பெரியகருப்பன், ராமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News