காவிரி ஆறு பொன்னி ஆறு திருமணி முத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
காவிரி ஆறு பொன்னி ஆறு திருமணி முத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் பேட்டி;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் செந்தில்குமார் வட்டாரத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொன்னியாறு, காவிரி ஆறு, திருமணிமுத்தாறு, ஆகிய ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் பேசினார்கள். தற்போது தேர்தல் விரைவாக நடைபெற உள்ள சூழலில் நமது கோரிக்கையை வலியுறுத்தினால் கட்டாயம் விடிவு கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறும் போது பல்வேறு அரசுகளிடம் காவிரி பொன்னி ஆறு திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருந்தோம். ஆனால் எந்த அரசும் செவிசாய்க்கவில்லை இந்த அரசும் செவி சாய்க்கவில்லை எனவே இன்னும் நான்கு ஐந்து நாட்களில் எலச்சிபாளையம் பகுதியில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பகுதி விவசாயிகளை இணைத்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தால் தேர்தல் புறக்கணிப்பு குறித்த பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட வேண்டி இருக்கும் என தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்