ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மின்சாரத்துறை லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே ஆற்காடு ஜெகநாதன் சுவாமி தெருவை சேர்ந்த ஏ,ஆர். சேட்டு வயது 84, ஓய்வு பெற்ற ஆசிரியர், வீட்டிலிருந்து டீக்கடைக்கு செல்லும்போது, எதிர் திசை வழியில் வந்த லாரி, அவர் மீது மோதி பலத்த காயமுடன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.;
ஆற்காட்டில் மின்சாரத்துறை லாரி மோதி முதியவர் உயிரிழப்பு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே ஆற்காடு ஜெகநாதன் சுவாமி தெருவை சேர்ந்த ஏ,ஆர். சேட்டு வயது 84, ஓய்வு பெற்ற ஆசிரியர், வீட்டிலிருந்து டீக்கடைக்கு செல்லும்போது, எதிர் திசை வழியில் வந்த லாரி, அவர் மீது மோதி பலத்த காயமுடன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.