சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி மாணவர்களிடையே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு;

Update: 2026-01-05 16:20 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமையில் குளித்தலை அரசு போக்குவரத்து கழக கிளை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாகனம் கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டு முன்னோர்கள் மத்தியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் குளித்தலை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ரமேஷ் நடத்துனர் கிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு அலுவலர் ராமமூர்த்தி, ஓட்டுநர் போதகர் சௌந்தர்ராஜ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை விளக்கி கூறினார்கள். சீரான போக்குவரத்திற்கு மாணவ மாணவிகளின் ஒத்துழைப்பு மற்றும் சாலை விதிகளை மீறினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் ஆகியன குறித்த விளக்கப்படங்கள் விளக்க உரைகள் எடுத்து கூறப்பட்டது. இதனை அடுத்து சாலை பாதுகாப்பு பதாகைகள் மாணவ, மாணவியர் கையில் ஏந்தும் விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்பட்டது. இதனை அடுத்து விழிப்புணர்வு பேருந்து மூலம் சாலை விழிப்புணர்வு கண்காட்சியும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு பேராசிரியர் வைரமூர்த்தி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் பேராசிரியர் பாபுநாத் ஆகியோர் செய்தனர்.

Similar News