வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை- 2 பேருக்கு காப்பு.

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை- 2 பேருக்கு காப்பு.;

Update: 2025-06-27 23:38 GMT
வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை- 2 பேருக்கு காப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்துள்ள கோணேகவுண்டனூா் கிராமம் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது, தகவல் அறிந்து வந்தத சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவா் பல்லேரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகள் ஷாலினி (22) என்பதும் என். தாசிரிப்பள்ளியைச் சோ்ந்த மதியழகன் என்பவருக்கும் ஷாலினிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவரை பிரிந்து பந்திகுறி கிராமத்தை சோ்ந்த ஆஞ்சி (30) என்பவரை ஷாலினி மறுமணம் செய்துகொண்டார்.இவா்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இதே கிராமத்தை சோ்ந்த மேகநாதன் (21) என்பவருடன் ஷாலினிக்கு உறவு ஏற்பட்டதால் கா்ப்பம் அடைந்த அவா் மேகநாதனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் மேகநாதன் தனது உறவினரான புகழேந்தி (19) என்பவருடன் சோ்ந்து ஷாலினியை கடந்த 19-ம் தேதி கொலை செய்தது தெரியவந்தது. ஷாலினியின் செல்போனை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மேகநாதன், புகழேந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News