சேலம் மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் நடந்த சாலை விபத்துகளில் 443 பேர் பலி
அதிகாரிகள் தகவல்.;
சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக விபத்துகளில் உயிர்ப்பலி அதிகளவில் நடைபெற்ற இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அங்கு விபத்தை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் தேவையான இடங்களில் சிக்னல்கள் அமைத்தல், சாலையின் நடுவில் தடுப்பு கம்பிகள் வைத்தல் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல் என விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் ‘ஹெல்மெட்’ அணிந்து ஓட்டவேண்டும் என்றும், சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கடந்த 8 மாதத்தில் சேலம் மாநகரில் 116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 120 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 442 பேர் காயம் அடைந்துள்ளனர். புறநகரில் நடைபெற்ற 307 சாலை விபத்துகளில் 323 பேர் பலியாகி உள்ளனர். 1,021 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.