திருச்செந்தூரில் 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூரில் 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!;

Update: 2025-08-24 06:09 GMT
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே கடல் பகுதியில், தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும்கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகி விட்டது. இதே போல வெள்ளிக்கிழமை பகல் 12.54 மணி முதல் சனிக்கிழமை பகல் 12.30 மணி வரை அமாவாசை இருந்தது. இதன் காரணமாக அய்யா கோவில் அருகே நேற்று காலை, மாலையில் சுமார் 80 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல புனித நீராடினர்.

Similar News