தரங்கம்பாடி பகுதியில் மட்டும் 8000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 8,000ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி தண்ணீரில் சாய்ந்து பாதிப்பு.அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை.;

Update: 2025-01-21 11:22 GMT
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் நடப்பாண்டு 30,000 ஏக்கர் மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பருவ மழையில் தப்பிய பயிர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழை காரணமாக திருக்கடையூர்,தரங்கம்பாடி, செம்பனார்கோவில், காழியப்பன்நல்லூர், தலைச்சங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 8,000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது. தமிழகத்தில் அதிகப்படியாக தரங்கம்பாடியில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ள நிலையில் மேலும் மழை நீடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் முளைக்கத் தொடங்கினால் முழுவதும் அழிந்து பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.தண்ணீர் வடிந்தாலும் அறுவடை செய்ய கூடுதல் தொகை செலவாகும் நிலையில் உரிய மகசூல் கிடைக்காது என்பதால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News