சிவன்மலை தைப்பூச தேர் திருவிழாவையொட்டி தற்காலிக கடைகள் ரூ.8.13 லட்சத்திற்கு ஏலம்
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை தைப்பூச தேர் திருவிழாவையொட்டி தற்காலிக கடைகள் ரூ.8.13 லட்சத்திற்கு ஏலம்;
காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி தேர்திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் சிவன்மலை அடிவாரத்தில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் திருவிழாவிற்க்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தேர்த் திருவிழாவின் போது சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக செயல்படும் கடைகளுக்கான ஏலம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிவன்மலை சுகுமார் என்பவர் அதிகபட்சமாக வரிகள் உட்பட ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.