கரூர் மாவட்டத்தில் 8.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 8.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 8.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து லேசான மேகமூட்டத்துடன் வானிலை இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. அந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் 2 மில்லி மீட்டர், க. பரமத்தியில் 4.20 மில்லி மீட்டர், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 1.20 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 8.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 0.70 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.