ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல் 86 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு கடிதம்.
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல் 86 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது
அரியலூர் டிச.27- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 கல்வியாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடைபெற்றது. தனியார் நிறுவனமான சென்னை, புரூடில் இன்டெக்கரேடேட் சர்வீஸ் சொலுசன் நிறுவனம் வளாக நேர்காணலை நடத்தியது. இதில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பல்வேறு துறையை சேர்ந்த 164 மாணவ-மாணவிகள் பங்குபெற்றனர். இறுதியில் பல்வேறு துறையைச்சார்ந்த 86 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அந்நிறுவனத்தைச் சார்ந்த அலுவலர்கள் விநோதினி, சுரேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ் ஆகியோர் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் இராசமூர்த்தி, இணைப்பேராசிரியர், இயற்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தார். கணித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் நந்தகுமார் உடன் உள்ளார்