எலக்ட்ரிகல் கடையில் 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்
நத்தம் அருகே பிரபல எலக்ட்ரிகல் கடையில் 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் - தனிப்படை போலீசார் நடவடிக்கை;
நாடு முழுவதும் வருகின்ற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி விற்பனைக்காக சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பட்டாசு விற்பனை செய்வதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சிவகாசியிலிருந்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு வகைகளை வாங்கி வந்து அரசு அனுமதி பெறாமல் விற்பனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள சூசை மகன் அருளானந்தம் சேவியர் (48) என்பவருக்கு சொந்தமான பிரபல எலக்ட்ரிகல் கடையில் (அன்னை எலக்ட்ரிக்கல்) பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் தடை செய்யப்பட்ட சரவெடிகள் உள்ளிட்ட 86 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த பட்டாசுகளை நத்தம் போலீசார் வசம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடை செந்துறை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் (சபரி)ஆகியோரின் சகோதரர்தான் அருளானந்தம் சேவியர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.