எலச்சிபாளையம் ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் முறையாக சாக்கடைகள் தூர்வாரப் படவில்லைஎனக்கூறிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்முற்றுகை போராட்டம்

திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் முறையாக சாக்கடைகள் தூர்வாரப் படவில்லை இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள்அலட்சியத்தால்இந்த போராட்டம் முற்றுகை போராட்டமாகமாறியது;

Update: 2025-11-25 13:12 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்தது 87 கவுண்டம்பாளையம்.  எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் உள்ள ஐந்தாவது வார்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை சுத்தம் செய்யாமல் பல ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பலரிடம் மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு, , பேதி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்இன்று குமாரமங்கலம் பகுதியில் உள்ள 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் இந்தப் போராட்டத்தை  கண்டு கொள்ளாததால் ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டமாக மாற்றப்பட்டு ஊராட்சி வாயிலில் பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் வரும் முப்பதாம் தேதிக்குள் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி கொடுப்பதாக உறுதியளித்து எழுதிக் கொடுத்ததன் பேரில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ் கூறும் போது கடந்த மூன்று ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாரும்படி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனை அடுத்து மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் எழுத்து பூர்வமாக வரும் 30 ஆம் தேதிக்குள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக எழுதிக் கொடுத்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது 30 ஆம் தேதிக்குள் தூர்வாரப் படாவிட்டால் சாக்கடைக்குள் இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறினார். இந்த போராட்டத்தில் ஊர் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி   முழக்கங்களை எழுப்பினர்.

Similar News