கேட்பாரற்று கிடந்த 9 கிலோ மதிப்புள்ள குட்கா
ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய திண்டுக்கல் இரயில்வே போலீசார்;

திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்படை காவலர் மணிவண்ணன், போலீசார் விவேக், குமார், ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என ரெயில்களில் சோதனை நடத்தினர். அப்போது நிஜாமுதீனில் இருந்து மதுரை வரை செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் சோதனை நடத்தினர். அதில் பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் சுமார் 9 கிலோ மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். பின்னர் கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறைனர் வசம் ஒப்படைத்தனர்.