கோவை: அமிர்தா வித்யாலயம் பள்ளி-உலக சாதனைகள் படைக்க திட்டம்

அமிர்தா வித்யாலயம் பள்ளி, தனது 25 - ம் ஆண்டு விழாவை வரும் 2025 ஏப்ரல் 3 முதல் 9 வரை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளதால் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 25 உலக சாதனைகளை படைக்க உள்ளனர்.;

Update: 2025-04-02 02:07 GMT
கோவை: அமிர்தா வித்யாலயம் பள்ளி-உலக சாதனைகள் படைக்க திட்டம்
  • whatsapp icon
கோவை, நல்லாம்பாளையத்தில் அமைந்து உள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளி, தனது 25 - ம் ஆண்டு விழாவை வரும் 2025 ஏப்ரல் 3 முதல் 9 வரை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளது. இந்த விழாவில், பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 25 உலக சாதனைகளை படைக்க உள்ளதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களின் வழிகாட்டுதலின்படி, கல்வி, இலக்கியம், கலை மற்றும் கைவினை, விளையாட்டு, ஓவியம், தனித் திறமைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பல்வேறு துறைகளில் இந்த சாதனைகள் படைக்கப்பட உள்ளன. இந்த நிகழ்வில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை நிறுவனங்களின் வெளிநாட்டுத் தூதர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உள்நாட்டுப் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Similar News