ஆற்றுப் பாலத்தில் வாலிபர் சடலம்

பெரியாம்பட்டி அருகே ஆற்றுப்பாலத்தில் வாலிபர் சடலம் காரிமங்கலம் காவலர்கள் விசாரணை;

Update: 2025-04-02 02:12 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ஆற்றுபாலத்தில் நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், பெரியாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பே ரில், காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று, வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வந்து, தடயங்கள் சேகரித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தூக்கில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்து கொாலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டு சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News