மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை அரூர் போலீசார் விசாரணை.;

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட காட்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கரியமால் 56, கூலித் தொழிலாளி, இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர் இந்த நிலையில் மூன்றாவது மகன் அரவிந்தன் வயது 28, இவருக்கு 12 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவா என்னது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.