தூத்துக்குடியில் 9 எஸ்.ஐ.க்களுக்கு பதவி உயர்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 9 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 9 சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 250 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் வேல்ராஜ், முத்துமாரி தேவேந்திரர், சுரேஷ்குமார், ஸ்டீபன், செல்வகுமார், சத்தியபாமா, கமலா தேவி, பாலகிருஷ்ணன், விக்டோரியா, அற்புத ராணி ஆகியோர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 28ஆம் தேதி இன்ஸ்பெக்டராக பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.