கஞ்சா வழக்கில் 9 பேருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு சிறை தண்டனை;

Update: 2025-05-20 04:53 GMT
திண்டுக்கல், EB காலனி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வைரவன்(31), முத்துக்கருப்பன்(23), சுந்தரபாண்டி(38), நவீனா(25), அர்ஜுனன்(48), சேக்பரித்(33), திவ்யா(31), சேக் முகமது ரபிக்(35), ஜலா பாகலோகேஸ்வரா பிரசாத்(30) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 36.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மன மயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் வைரவன் முத்துக்கருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அர்ஜுனன், ஜலாபாகலோகேஸ்வர பிரசாத் ஆகிய 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதமும், சேக்பரீத், திவ்யா, சேக்முகமதுரபிக் ஆகிய 3 பேருக்கு தலா 10-ஆண்டுகள் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News