ஜெயங்கொண்டம் அருகே டாட்டா ஏசி டிராக்டர் மோதல் டாட்டா ஏசியில் பயணித்த டிரைவர் உட்பட 9 பேர் காயம் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்

ஜெயங்கொண்டம் அருகே டாட்டா ஏசி டிராக்டர் மோதிய விபத்தில் துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசியில் பயணித்த 22 பேரில் 9 பேர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2025-06-19 16:34 GMT
அரியலூர், ஜூன்.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது டாட்டா ஏசி வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு தேவனூரில் உள்ள துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது தேவனூர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது எதிரே பருக்கல் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் ஆண்டிமடத்தில் இருந்து பருக்கல் நோக்கி டிராக்டரை ஓட்டி வந்து டாட்டா ஏசியின் மையப் பகுதியில் மோதியதில் டாட்டா ஏசியில் பயணம் செய்த இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, மற்றொரு சரோஜா, சசிகலா, அனிதா, ராமலிங்கம் மனைவி கமலம் செல்வமணி, நந்தினி, மாலதி, டாட்டா ஏசி டிரைவர் சண்முகம் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சரக்கு வாகனங்களில் பயணிக்க கூடாது என போலீசார் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வரும் நிலையில் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதற்கு சாலை விதிகளை கடைபிடிக்காத ஓட்டுநர்களே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News