ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு 9.ம். ஆண்டாக 50 கிலோ அன்னாபிஷேக அலங்காரம் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்...

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு 9.ம். ஆண்டாக 50 கிலோ அன்னாபிஷேக அலங்காரம் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்...;

Update: 2025-08-08 14:54 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் பௌர்ணமியை முன்னிட்டு 9.ம் ஆண்டாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், மற்றும் பால்,தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசியை கொண்டு சமைத்து 50 கிலோ அன்னாபிஷேக அலங்கார உற்சவம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த அன்னாபிஷேக அலங்காரத்தை தரிசனம் செய்வதால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் ஏற்படும் போன்ற ஐதீகத்தால் காலை முதலே நிண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முக்கிய குறிப்பு: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சனிக்கிழமை காலை அம்மனின் அன்னாபிஷேக சாதத்தை எடுத்து பூசாரிகள் வழங்குவார்கள்..

Similar News