காஞ்சி,ஸ்ரீ ஜெயேந்திரர் சுவாமிகளின் 91-வது ஜெயந்தி விழா ராசிபுரத்தில் நடைபெற்றது..

காஞ்சி,ஸ்ரீ ஜெயேந்திரர் சுவாமிகளின் 91-வது ஜெயந்தி விழா ராசிபுரத்தில் நடைபெற்றது..;

Update: 2025-08-10 14:04 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பின் சார்பில் காஞ்சி,ஸ்ரீ ஜெயேந்திரர் சுவாமிகளின் 91-வது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராசிபுரம் பட்டணம் சாலை வினாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் கடைவீதி ஏ.வி.எம். நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்கினர். ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஆர்.பரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலர் சி.கே.ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் அரிமா சங்கத்தை சேர்ந்த எஸ்.ரங்கசாமி, பெரியசாமி, மூர்த்தி, பி.சிவக்குமார், சிவமணி, எம்.ராகவன், கே.நடராஜன், வைத்தியலிங்கம், ஸ்டூடியே சி.கே.சீனிவாசன், ரமேஷ், பள்ளி தலைமையாசிரியர் கு.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News