மாவட்டத்தில் 92.70மி.மீ மழைப்பொழிவு பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 92.70மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காமாட்சிபுரத்தில் 31மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது;

Update: 2025-05-19 03:32 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தற்போது வெயில் தணிந்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 19.05.2025 திங்கட்கிழமை காலை வரை மழைப்பொழிவின் விபரம். திண்டுக்கல்லில் 10மி.மீ மறையும், காமாட்சிபுரத்தில் 31மி.மீ மழையும், நத்தத்தில் 16.50மி.மீ மழையும், வேடசந்தூரில் 8மி.மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 8.20மி.மீ, கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 9மி.மீ மழையும், கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 10மி.மீ மழையும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 92.70மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காமாட்சிபுரத்தில் 31மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Similar News