அய்யன் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி 95-வது ஆண்டு விழா மற்று குருபூஜை கொண்டாடிய P.புதுப்பட்டி கிராம மக்கள்*

அய்யன் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி 95-வது ஆண்டு விழா மற்று குருபூஜை கொண்டாடிய P.புதுப்பட்டி கிராம மக்கள்*;

Update: 2025-03-15 18:20 GMT
அய்யன் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி 95-வது ஆண்டு விழா மற்று குருபூஜை கொண்டாடிய P.புதுப்பட்டி கிராம மக்கள்*
  • whatsapp icon
காரியாபட்டி அருகே அய்யன் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி 95-வது ஆண்டு விழா மற்று குருபூஜை கொண்டாடிய P.புதுப்பட்டி கிராம மக்கள் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்குத் தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொடுத்த வள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் மாவட்டம், . காரியாபட்டி அருகே உள்ள P.புதுப்பட்டி கிராமத்தினர். செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்துத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் வழித்தோன்றல்களால் இத்திருக்கோயில் 1929 -ம் ஆண்டு கட்டப்பட்டு 4-வது தலைமுறையாக குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமின்றி கிராம மக்கள் அனைவரும் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் திருவள்ளுவர் முக்தி பெற்ற நாளான மாசி மாதம் பௌர்ணமி திதியில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று அருள்மிகு அய்யன் திருவள்ளுவர் நாயனாருக்கு உச்சிக்கால பூஜை உடன் விழா துவங்கியது. பிறகு குண்டாற்றில் மேளதாளங்கள், வான வேடிக்கைகள் முழங்க கரகம் எடுத்து வந்து அய்யன் திருவள்ளுவர் நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில் P.புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாண்டு காலமாக அய்யன் திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வரும் கிராம மக்களின் பண்பாடு போற்றுதலுக்குரியது.

Similar News