கோவை: மாணவர்கள் உருவாகிய AI விநாயகர் குறும்படம் !

AI தொழில்நுட்பத்தில் மாணவர்கள் உருவாக்கிய விநாயகர் அனிமேஷன் குறும்படம் வைரல்.;

Update: 2025-08-26 14:06 GMT
கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் விநாயகர் தோற்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். விநாயகர் பிறப்பு, யானைத் தலை பெற்ற வரலாறு உள்ளிட்ட புராணக் கதைகளை தத்ரூபமாக வடிவமைத்த இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி வருகிறது. மாணவர்களின் இந்த புதுமையான முயற்சியை கல்லூரி நிறுவனர், முதல்வர், செயலாளர் ஆகியோர் வெளியிட்டு பாராட்டினர். சமூக வலைதளங்களில் பலரும் இவர்களின் படைப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Similar News