கோத்தகிரி அரவேணு பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணியின் கால் மேல் ஏறிய அரசு பேருந்து. CCTV காட்சிகள் வெளியானதால் பெரும் பரபரப்பு
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது;

கோத்தகிரி அரவேணு பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணியின் கால் மேல் ஏறிய அரசு பேருந்து. CCTV காட்சிகள் வெளியானதால் பெரும் பரபரப்பு கோத்தகிரியில் இருந்து திருப்பூர் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு உள்ளது அதில் கோத்தகிரி அரவேனு தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் பயணித்துள்ளார். பேருந்து அரவேணு பகுதியை நெருங்கிய போது முன்பகுதியில் இருந்த அந்தப் பயணி அவசர அவசரமாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் கால் மீது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின் சக்கரங்கள் ஏறி அவரின் காலை நசுக்கியவாரே சிறிது தூரம் வந்து நின்றுள்ளது. அவர் கீழே விழுந்ததை பேருந்து நடத்தினர் மற்றும் பயணிகள் யாரும் கவனிக்கவில்லை. கால் பேருந்து சக்கரத்தின் கீழ் நசுங்கியதால் வலி தாங்க முடியாமல் அவரின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து பார்த்தபோது அவரது கால் மேல் பேருந்தின் பின் சக்கரம் ஏறியவாறு நின்றுள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்து பின்னோக்கி இயக்கினார் அப்போது அந்தப் பயணியே சாலையில் உருண்டவாரே பேருந்தின் சக்கரத்தின் கீழிருந்து காலை வெளியே எடுத்து சாலையின் ஓரத்திற்கு வந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த சாலையின் அருகில் இருந்த ஒரு வீட்டினுள் பொறுத்தியிருந்த CCTV கேமராவில் பதிவாகி தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அருகில் இருந்த யாரும் அவரை வெளியே எடுக்க உதவி புரியாமல் வேடிக்கை பார்த்த சம்பவமும் அந்த காமிராவில் பதிவாகி உள்ளதால் மனித நேயம் மக்களிடையே குறைந்து வருவதாக பலரும் வேதனை பட்டு வருகின்றனர்.