மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவையில் “DEXPORA 2025” போட்டி !
ஒய்.எம்.சி.ஏ.வின் 50ஆவது ஆண்டு கூடைப்பந்தாட்ட போட்டி.;
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கோவை ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்தாட்ட கழகம் “DEXPORA 2025” என்ற 50ஆவது ஆண்டு கூடைப்பந்தாட்ட போட்டிகளை நடத்தியது. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழக்கறிஞர் சண்முகம் மற்றும் தலைவர் ஜெயக்குமார் டேவிட் பரிசுகள் வழங்கினர். 70 ஆண்டுகளாக இலவச பயிற்சி வழங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ., நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களை தேசிய, சர்வதேச அளவுக்கு உருவாக்கியுள்ளது. “DEXPORA” என்பது தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான் பண்டிகைகளை ஒருங்கிணைத்து, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.