நீட் தேர்வை கொண்டு வந்தது,ரத்து செய்ய சொல்லி நாடகம் ஆடுவது திமுக தான் - EPS
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த போடிநாயக்கன்பட்டி அருகே குப்பதாசன் வளவு பகுதியில் உள்ள மறைந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் படிப்பதற்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா குடும்பத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் கட்சியை நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ள எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆனந்தி தம்பதியரின் மகள் புனிதா நேற்று முன் தினம் மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் படிப்பதற்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு இன்று காலை வருகை புரிந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் ஆறுதல் கூறினார் பின்னர் மாணவியின் தாயாரிடம் அதிமுக கட்சி நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் அப்போது மாணவியின் தங்கை மற்றும் தாயாரிடம் மனம் தளராமல் இருக்குமாறு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கடந்த தேர்தலின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என கூறினார். ஆனால் இதுவரை அது என்ன ரகசியம் என்று கூறவில்லை அதேபோன்று இந்த நீட் தேர்வை கொண்டு வந்ததும் காங்கிரசும் திமுகவும் தான் இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறுவதும் இதே திமுக தான் ஆக நீட் தேர்வு விசயத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறது திமுக அரசு இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டி பேசினார்.