உடுமலையில் EVKS இளங்கோவன் மறைவுக்கு நினைவஞ்சலி கூட்டம் முன்னாள் எம்எல்ஏ கண்ணீர்!
அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு;
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு நினைவஞ்சலி கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு தலைமையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில் திமுக, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை , திராவிடர் கழகம் மதிமுக , பாரதிய ஜனதா கட்சி அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து இளங்கோவன் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் அனைவரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் தாராபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து பேசும் பொழுது.. தாராபுரத்தில் யாருக்கும் என்னை தெரியாத நிலையில் சட்டப்பேரவையில் உட்காரவைத்து அழகு பார்த்தவர் ஈ வி கே இளங்கோவன் அவர்கள் தான் தாராபுரம் தொகுதிக்கு போட்டியிட விண்ணப்பம் மட்டும்தான் அளித்தேன் என் வெற்றிக்காக பாடுபட்டவர் இளங்கோவன் அவர்கள் தான் என்று கண்ணீர் மல்க பேசினார் இறுதியாக அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் நினைவஞ்சலி கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் கோ.ரவி , உடுமலை நகராட்சி 4-வது வார்டு காங்கிரஸ் வார்டு உறுப்பினர் கலைவாணி சதீஷ்குமார் மடத்துக்குளம் வட்டாரத் தலைவர் ராஜேஷ் கண்ணன் உடுமலை மேற்கு வட்டாரத் தலைவர் கனகராஜ் உடுமலை கிழக்கு வட்டார தலைவர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்