கோவை: HouseMates திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பு!

தமிழ் சினிமாவில் புதுமையான ஐடியாவாக இந்த Housemates படம் இருக்கும் என படக்குழு தகவல்.;

Update: 2025-07-28 07:12 GMT
தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், ஆஷா நடித்துள்ள HouseMates திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர், கோவை பிராட்வே சினிமாவில் நேற்று வெளியிடப்பட்டது. படக்குழுவினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ட்ரெய்லரில் காட்டப்பட்டதைவிட மேலும் பல சர்ப்ரைஸ்கள் படத்தில் உள்ளன; மக்கள் விரும்பும் காமெடி, ஹாரர், என்டர்டைன்மென்ட், எமோஷன் அனைத்தும் கொண்ட படம் இது என தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் புதுமையான ஐடியாவாக இந்த படம் இருக்கும் என்றும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்ல படங்கள் உருவாகும் என்பதை நிரூபிக்கும் முயற்சியாக இது இருக்கும் என்றும் இயக்குநர் கூறினார்.

Similar News