கோவை: நொய்யல் ஆற்றை பாதுகாக்க IAS குழு அமைக்க கோரிக்கை

நொய்யல் ஆறு பாதுகாப்பு, புறவழிச் சாலை திட்ட தெளிவு, விவசாய நில பாதுகாப்பு, மர நடவு திட்டம், மற்றும் காட்டுயிர் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் விளக்கம்.;

Update: 2025-10-15 06:23 GMT
கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் குறைகளை வலியுறுத்தினார். நொய்யல் ஆற்றை பாதுகாக்க IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், அதில் விவசாயிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயி கருப்பசாமியின் தென்னை மரங்களை அதிகாரிகள் சட்டவிரோதமாக வெட்டியதாகக் குற்றம்சாட்டிய அவர், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினார். கிழக்கு புறவழிச் சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சர்வீஸ் ரோடு உடனே அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் மீண்டும் நடவு செய்ய எந்த திட்டமும் இல்லையென குற்றம் சாட்டிய அவர், அவற்றுக்கான திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Similar News