விவசாயிகள் எதிர்ப்பு: IDBL எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தல்!

பாரத் பெட்ரோலியத்தின் IDBL எண்ணெய் குழாய் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்.;

Update: 2025-06-28 05:03 GMT
பாரத் பெட்ரோலியத்தின் IDBL எண்ணெய் குழாய் திட்டம் கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் வரை 320 கி.மீ தூரத்திற்கு செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில், கோவை – திருப்பூர் பகுதிகளில் 70 கி.மீ தூரம் விவசாய நிலங்கள் வழியாக குழாய் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், இந்த திட்டத்தை நிறுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த ஒரு வருடமாக இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். சாலையோரமாக குழாய் அமைக்க வேண்டும் எனவும், அதை பின்பற்றாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Similar News