திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை: IT நிறுவனர் பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஆண் கைது!
பணியிடத்தில் நெருக்கம் – பின்னால் பாலியல் அத்துமீறல்: மிரட்டிய நபருக்கு சிறை;
கோவையில் IT நிறுவனம் நடத்தும் 40 வயதுடைய பெண்ணிடம், பவானியை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமிறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமையில் எடுத்த ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்தும், மின்னஞ்சல் மூலம் மிரட்டியும் வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் 2023ல் சிறைக்குச் சென்ற அருண்குமார், பிணையில் வெளியே வந்த பின்னரும் மீண்டும் அதே செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, அருண்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.