அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் "JUSTICE FOR AJITHKUMAR " பதாகைகள் ஏந்தி விடியா திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்*
அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் "JUSTICE FOR AJITHKUMAR " பதாகைகள் ஏந்தி விடியா திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்*;
நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் "JUSTICE FOR AJITHKUMAR " பதாகைகள் ஏந்தி விடியா திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இருஞ்சிறை விலக்கு பகுதியில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் "JUSTICE FOR AJITHKUMAR" பதாகைகளை கைகளில் ஏந்தி விடியா திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் "JUSTICE FOR AJITHKUMAR" பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும், விடியா அரசின் காவல் துறையைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் லாக் அப் டெத்தில் உயிரிழந்த அஜித்குமார் க்கு உரிய நீதி வழங்க வேண்டியும், விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்தும் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் கைகளில் "JUSTICE FOR AJITHKUMAR" பதாகைகள் ஏந்தி விடியா திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் M.S.R.ராஜவர்மன் , சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரேசன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் மற்றும் நரிக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரன், திருச்சுழி ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனியாண்டி, முத்துராமலிங்கம், கருப்பசாமி, காரியாபட்டி ஒன்றிய கழகச் செயலாளர்கள் தோப்பூர் முருகன், வேங்கை மார்பன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வீரபாண்டி, நரிக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அங்குராசு, வீரசோழன் நகரக் கழகச் செயலாளர்கள் அப்துல் நாஸர், பரமேஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.