கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் “KSR Connect 2K25” எனும் மாணவர்களுக்காண வழிகாட்டுதல் நிகழ்ச்சிநடைபெற்றது

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் “KSR Connect 2K25” எனும் மாணவர்களுக்காண வழிகாட்டுதல் நிகழ்ச்சி எடுஸ்கில்ஸ் (Eduskills) நிறுவனத்தின் ஆதரவுடன் சிறப்பாக நடத்தப்பட்டது.இதில் பல முன்னணி நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்;

Update: 2025-11-14 13:09 GMT
கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் “KSR Connect 2K25” எனும் மாணவர்களுக்காண வழிகாட்டுதல் நிகழ்ச்சி 08.11.2025 அன்று எடுஸ்கில்ஸ் (Eduskills) நிறுவனத்தின் ஆதரவுடன் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் திரு. கே.எஸ். சச்சின் அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். கல்லூரியின் டீன் டாக்டர். எம். வெங்கடேசன், முதல்வர் டாக்டர். பி. மீனாட்சி தேவி, இயக்குநர்கள், துறை தலைவர்கள் மற்றும் பிளேஸ்மெண்ட் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டனர். இதில் பல முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் (HR’s) மாணவர்களுடன் கலந்துரையாடி, வேலைவாய்ப்பில் வெற்றி பெற தேவையான திறன்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து வழிகாட்டினர். மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் எடுஸ்கில்ஸ் மற்றும் கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் மற்றும் தொடர்பு மேடையாக அமைந்தது.

Similar News