செந்துறையில் நீNதிமன்றம், நீதிபதி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கி வைப்பு
செந்துறையில் நீNதிமன்றம், நீதிபதி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நீதிபதி தொடக்கி வைத்தார்.;
அரியலூர், பிப்.22- அரியலூர் மாவட்டம், செந்துறையில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.மலர் வாலண்டினா, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், அரியலூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி டி.செல்வம், அரியலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிமேகலை, செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆக்னஸ்ஜெபகிருபா ஆகியோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். :