தமிழக NDA தலைமை எடப்பாடி பழனிசாமிதான்: பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் பேச்சு
கோவை, சுல்தான்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி உழவர் தியாகிகள் மாநாட்டை நடத்தியது.;
கோவை, சுல்தான்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி நடத்திய உழவர் தியாகிகள் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தலைமை எடப்பாடி பழனிசாமிதான் எனத் திட்டவட்டமாக கூறினார். ஒரே கருத்துடன், விவசாய கட்சிகளையும் இணைத்து வருங்கால தேர்தல்களை சந்திக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது பிசாசு ஆட்சி நடக்கிறது. ஜாதிக் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஆட்சி பெற நினைக்கின்றனர். அதை எதிர்த்து NDA ஒன்றிணைந்து வெற்றி பெறும் என்றும் அவர் வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமாயிலுக்கு மாற்றாக நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.