நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி whatsapp மூலம் பண மோசடி செய்ய முயற்சி .....................
சைபர் கிரைம் போலீசார் விசாரணை ...............;
நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி whatsapp மூலம் பண மோசடி செய்ய முயற்சி ..................... சைபர் கிரைம் போலீசார் விசாரணை ............... நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா என்ற பெயரில் போலி வாட்ஸ் அப் குறுஞ்செய்தி +84 56 715 0853 என்ற வாட்ஸ் அப் எண்ணிலிருந்து மாவட்ட ஆட்சியர் அனுப்புவது போன்ற தவறான போலி குறுஞ்செய்தியினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாவும், எனவே, மாவட்ட ஆட்சியர் பெயரில் இந்த எண்ணிலிருந்து போலி குறுஞ்செய்தி அனுப்புகின்ற போலி நபருக்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும், பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம் எனவும், ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையின் மூலம் போலியாக குறுஞ்செய்தி அனுப்பும் நபரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.