ஜீன்1 அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தினர் திரளாக பங்கேற்பீர்.
பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை;
முதலமைச்சர் - கழகத்தலைவர் தலைமையில் ஜீன்1 அன்று மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தினர் திரளாக பங்கேற்பீர்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 9.00 மணியளவில், மதுரை, உத்தங்குடி, "கலைஞர் திடலில்" நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்டத்த்தைச்சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு தலைமைக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தினை எடுத்து வந்து, மாவட்டத்தின் பெயர் பொறித்துள்ள கவுண்டரில் வைத்துள்ள "மினிட்" புத்தகத்தில் கையொப்பமிட்டு தங்களுக்குண்டான 'பேட்ஜ்' ஐ பெற்றுக்கொண்டு காலை 8.00 மணிக்குள் பொதுக்குழு நடைபெறும் கூட்ட அரங்கிற்குள் நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.