பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.1 லட்சம் யூரோ கரன்சி

கொள்ளிடம் சோதனை சாவடியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,08,600 ரூபாய் மதிப்புள்ள யூரோ கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-20 01:55 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் பறக்கும் படை சர்வேலைன்ஸ் குழுவினர் தலைமை உதவியாளர் சுதமதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி சென்ற சொகுசு காரினை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 1200 யூரோ கரன்சி ( இந்திய ரூபாய் மதிப்பில் 108600) மற்றும் இந்திய ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 33600 எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதொகையை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News