ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-23 10:58 GMT
பணம் பறிமுதல்
நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக உரிய ஆவணம்மின்றி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரி சோதனை சாவடியில் அதிகாரி பூபதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் வந்த அவனியாபுரத்தை சேர்ந்த பாண்டிசெல்வி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் முத்துமாரியிடம் ஒப்படைத்தனர்.