10 ஆம் ஆண்டு கடை துவக்க விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை,பாதுகாப்பு உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கிய புகைப்படக் கலைஞர் பொதுமக்கள் பாராட்டு

ஜெயங்கொண்டம் அருகே 10 ஆம் ஆண்டு கடை துவக்க விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை,பாதுகாப்பு உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கிய புகைப்படக் கலைஞர் பொதுமக்கள் பாராட்டினர்;

Update: 2024-12-23 12:11 GMT
அரியலூர், டிச.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் பாண்டி பஜார் கிராமத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவர் கலையரசன். இவர் சுமார் 9 ஆண்டுகளாக இந்த தொழிலை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார். இந்நிலையில் தனது ஸ்டுடியோவின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தான் பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ற உயரிய நோக்கத்துடன் இல்லாத ஏழை மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று எண்ணிய கலையரசன் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கினார்.மேலும் அவர்கள் குப்பைகளை சேகரிக்க ஏதுவாக குப்பைத் தொட்டிகளையும் வழங்கி அதனை கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு முன்பு வைத்து சிரமமின்றி எடுத்துச் செல்ல வழிவகை செய்யும் வகையில் இந்த பணியினை மேற்கொண்டுள்ளார்.புகைப்படம் தொழில் செய்பவர்கள் அவர்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் அது சார்ந்த வீடியோக்களை இணையங்களில் பதிவு செய்து அதன் மூலம் தனக்கான விளம்பரங்களை செய்து வருகின்றனர், மேலும் வருமானத்துக்காக பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் தன்னுடன் தினமும் பேசி சென்று வரும் சக மனிதர்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் வகையிலும் இந்த செயலை செய்துள்ளார்.இதனையா பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் இச்சம்பவம் புகைப்பட தொழில் செய்யும் புகைப்பட கலைஞர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News