10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர், மார்ச்14- 70 அகவைக்கு 10% கூடுதல் பென்ஷன் வழங்கவும், பழைய பென்ஷன் திட்டத்தை தொடரவும், குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் வழங்கவும், மருத்துவ காப்பீட்டு திட்டம் காசில்லா மருத்துவம் உறுதிப்படுத்தவும், குடும்ப பாதுகாப்பு நிதியை மூன்று லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் சங்க கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் சங்கத்தின் தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமே எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.