10 வருடமாக செயல்படாமல் இருக்கும் பால் பூத்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறக்கூடும் என பொதுமக்கள் வேதனை................

தீர்வு ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-04-17 15:40 GMT
10 வருடமாக செயல்படாமல் இருக்கும் பால் பூத்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறக்கூடும் என பொதுமக்கள் வேதனை................ நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சேரகுண்டு பகுதியில் 10 வருடம் காலமாக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பால் பூத் செயல்படாமல் துருப்பிடித்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் இங்கு கெரடா சேரகுண்டு ஆளடா என மூன்று கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இந்தப் பால் பூத் மையப் பகுதியில் செயலிழந்து காணப்படுவதாகவும் இதை நூலகமாகவோ அல்லது நியாய விலை கடையை அகவோ மாற்றி தங்களுக்கு கொடுத்தால் மிகவும் பயன் பெறும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு பத்து வருடமாக இயங்காமல் இருக்கும் இந்த பால் பூத்தை மக்கள் பயன்படுத்த ஏதுவாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News